வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2016 (10:38 IST)

தயாரிப்பாளராகும் சன்னி லியோன்

தயாரிப்பாளராகும் சன்னி லியோன்

முன்னாள் நீலப்பட நடிகையான சன்னி லியோன் இந்திப் படங்களில் நடித்து, தனது அனைத்து பாவங்களையும் கழுவி திருநிலைப்படுத்தப்பட்டார்.


 


இப்போது சன்னி லியோன் இந்தியாவின் மதிப்பு மிகுந்த செலிபிரிட்டி. 
 
ஷாருக்கான் தனது படத்தில் சன்னி லியோனுடன் ஒரு பாடலுக்கு ஆடி, சன்னி லியோன் தீண்டத்தகாதவரெல்லாம் இல்லை என்று நிரூபித்துள்ளார் (இந்த கரிசனம் ஷகிலா போன்ற நடிகைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு).
 
இதுவரை படங்களில் நடித்துவந்த சன்னி லியோன் இந்த வருடத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்கிறார். 
 
அவர் தயாரிக்கும் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்க உள்ளது.
 
அத்துடன் சூப்பர்ஹீரோ கதையொன்றை இந்தியில் தயாரிக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். 
 
அடுத்த வருட பத்ம விருது பட்டியலில் சன்னி லியோனின் பெயரும் இடம்பெறலாம்.