விஷால் மீது எந்த நடவடிக்கையும் இல்லை: தயாரிப்பாளர் சங்கம்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 3 ஜனவரி 2017 (19:22 IST)
தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக விஷால் கூறிய கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்தால், அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய தயார் என்று தயாரிப்பாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

 

 
தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து ஊடகங்களில் பேட்டியளித்தால் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கில் இன்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், நடிகர் விஷால் அவர் கூறிய கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்ததால் அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய தயார் என்று கூறியுள்ளது.
 
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நாளை உரிய பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் நெருங்கும் நேரத்தில், இத்தகைய பதிலை தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :