தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி ராஜேந்தர்

Sasikala| Last Modified புதன், 28 டிசம்பர் 2016 (09:57 IST)
தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கிறது. தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் நடிகரும்  இயக்குநருமான டி. ராஜேந்தர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்  நடத்தப்படுகிறது.

 
கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் தலைவராக கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா,  ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்களாக கதிரேசன், தேனப்பன், பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் உள்ளனர்.
 
இந்நிலையில் இவர்கள் பதவி காலம் முடிவடைவதால், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி மாதம்  5-ந்தேதி நடக்கிறது. இந்த முறை கலைப்புலி தாணு போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார். புதிய நிர்வாகிகள்  தேர்வுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 8-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி முடிவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி  நாள், 13-ந்தேதி. இறுதி வேட்பாளர் பட்டியல் 18-ந்தேதி வெளியிடப்படும். இந்த தேர்தலில் 3 அணிகள் போட்டியிட தயாராகி  வருகின்றன.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :