Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அடுத்த வாரம் வெளியாக இருந்த ‘பைரவா’ வெளியீட்டில் சிக்கல்!

Sasikala| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (15:52 IST)
பைரவா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்க்கு  கேரளாவிலும் ஏராளமான  ரசிகர்கள் உள்ளதால், அங்கும் 75 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக, பட விநியோகஸ்தர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து  வருகின்றனர்.

 
இந்நிலையில், கேரளாவில் 'பைரவா' படத்தை வெளியிட கேரள மாநில இளைஞர் காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் மலையாள படத்தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த  டிசம்பர் மாதம் 16-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் நடந்து வருவகிறது. இதனால் மலையாள படங்கள் வெளியாவது  தடைபட்டுள்ள நிலையில், பிறமொழி படங்களை வெளியிடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
எனவே அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படங்களை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க முடியாது என்று இளைஞர்  காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விஜய்யின் பைரவா, சூர்யாவின் போன்ற படங்கள் வெளியாவதில்  சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :