1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (11:56 IST)

ரேஸ் வீரர், இரண்டு ஜோடிகள், அந்தமானில் ஷுட்டிங்.... பிரேம்ஜி காட்டில் பேய் மழை

காமெடி நடிகர்கள் ஹீரோவாகும் படங்களில் பாதிதான் கரை சேரும், மீதி புயலில் கரைந்த தோணியின் கதைதான்.
பிரேம்ஜி நாயகனாக இரு வேடங்களில் நடித்த மாங்கா என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஊறுகாய் போட்டிருக்கலாம். இந்நிலையில் இன்னொரு படத்தில் சத்தமில்லாமல் ஹீரோவாக நடித்து வருகிறார்.
 
இதில் பிரேம்ஜி கார் ரேஸ் வீரராக வருகிறார். இவருக்கு மீனாட்சி தீட்ஷித், அருந்ததி என்று இரண்டு ஜோடிகள். ஆக்ஷன், காமெடி, காதல் என்று அனைத்தும் கலந்துகட்டி தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரில் முடிந்து தற்போது அந்தமான் காடுகளில் நடந்து வருகிறது. வெங்கட்பிரபுவும், கங்கை அமரனும் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்கள்.
 
மதில் மேல் பூனை படத்தை இயக்கிய பரணி ஜெயபால் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.