வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 மே 2017 (10:36 IST)

தல அஜித்திற்கு ஆப்பு வைத்திருக்கும் பிரேமம் இயக்குனர்!!

பிரேமம் மலையாள படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். 


 
 
அல்போன்ஸ் புத்ரன் நேரடி தமிழ் படமான நேரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆனதை அடுத்து அல்போன்ஸ் புத்ரன் இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
 
இந்த பதிவை கண்ட ரசிகர் ஒருவர் நீங்கள் விரைவில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
 
இதற்கு பதில் அளித்த அல்போன்ஸ், நானும் என் நண்பனும் சென்னையில் படிக்கும் போது அஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தோம். ஆனால், இன்று வரை அவரை பார்க்க முடியவில்லை. விரைவில் அவரை வைத்து படம் இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், அஜித்திற்காக ’ஆப்பு’ என்ற கதையை ரெடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.