வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : புதன், 19 நவம்பர் 2014 (09:19 IST)

தமனுக்கு கார் பரிசளித்த பிரசாந்த், தியாகராஜன்

இசையமைப்பாளர் தமனுக்கு அவரது பிறந்தநாளுக்கு நடிகர் பிரசாந்தும் அவரது தந்தை தியாகராஜனும் இணைந்து சொகுசு கார் பரிசளித்துள்ளனர்.
 
பிரசாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாஹசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தியாகராஜன் தயாரிப்பு. இந்தப் படத்துக்கு தமன் இசை.
 
இந்நிலையில் சில தினங்கள் முன் தனது பிறந்தநாளை தமன் கொண்டாடினார். அவருக்கு சர்ப்ரைஸ் கிப்டாக பிரசாந்தும், தியாகராஜனும் இணைந்து கார் பரிசளித்தனர்.
 
சாஹசத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன.