வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (19:40 IST)

ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ் படங்களை தயாரிக்கும் பிரபுதேவா

சமீபத்தில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் பிரபுதேவா. அந்த அறிவிப்பின் போது, பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கப் போகும் படங்கள் குறித்த தகவலை ஆகஸ்ட் 3 ஆம் தேதி (இன்று) கூறுவதாக தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
 

 
பிரபுதேவா ஸ்டுடியோஸ் முதலில் 3 படங்களை தயாரிக்கயிருப்பதாக இந்த சந்திப்பில் அவர் கூறினார். நாம் ஏற்கனவே கூறியிருந்தபடி, ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
 
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடிக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு படத்தை அமலா பாலுடன் இணைந்து பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
 
மூன்றாவது படத்தை விக்டர் என்பவர் இயக்குகிறார். ஐசரி கணேஷின் மகன் வருண் இதில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைப்பதாக பிரபுதேவா குறிப்பிட்டார்.