1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (17:40 IST)

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்தப் படம் நிறைவடைந்தது

பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 

 
கயல் படத்துக்குப் பிறகு தனுஷ், கீர்த்தி சுரேஷை வைத்து ஒரு படத்தை பிரபுசாலமன் தொடங்கினார். சத்யஜோ‌தி ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் தனுஷ், ரயில் கேட்டரிங் சர்வீஸில் பணிபுரிகிறவராக நடித்து வந்தார்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் முழுக்க ரயிலில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்ததாக தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
 
டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.