1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 24 மே 2017 (20:08 IST)

அனுஷ்கா திருமணம் செய்யமால் இருக்க இவர்தான் காரணமாம்

நடிகை அனுஷ்கா திருமணம் தள்ளி போனதற்கு நடிகர் பிரபாஸ் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.


 

 
படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிலர் தங்கள் வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்துள்ளனர். அந்த வகையில் பாகுபலி 2 படத்தில் அனுஷ்கா - பிரபாஸ் ஜோடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது..
 
பாகுபலி படங்களில் நடித்த முடித்த பிரபாஸுக்கு திருமணம் செய்ய பெண் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பிரபாஸ் - அனுஷ்கா ஜோடி ரசிகர்களுக்கு பிடித்து போக சமூக வலைதளங்களில், இருவரும் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர வேண்டும் என்ற கருத்து வலம் வந்தது.
 
இதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்திலும் அனுஷ்கா அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் அனுஷ்கா திருமணம் தள்ளிப்போனதற்கு காரணம் பிரபாஸ் தான் என தெரியவந்துள்ளது.
 
பாகுபலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அனுஷ்காவுக்கு திருமணம் நடக்க இருந்தது. ஆனால் பிரபாஸ் அனுஷ்காவிடம், பாகுபலி படத்தில் முழு கவனத்தை செலுத்துங்கள்; திருமணத்தை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினாராம். இதனால்தான் அனுஷ்காவின் திருமணம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.