செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (12:18 IST)

த்ரிஷா, அஞ்சலி நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் பூர்ணா

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர் பூர்ணா. விஜய்யால் சின்ன அசின் என்று பாராட்டப்பட்டவர். வித்தகன் படத்தில் பார்த்திபனுடன் நடித்த போது, பூர்ணாவின் திறமையை இதுவரை யாரும் முழுதாக பயன்படுத்திக் கொண்டதில்லை என்று பார்த்திபனால் புகழப்பட்டவர். 
அப்படிப்பட்டவருக்கு இப்போது கைவசம் படங்களில்லை. பரத நாட்டியம் சொல்லிக் கொடுக்கும் பள்ளியை கேரளாவில் ஆரம்பிக்கும் திட்டத்திலிருக்கிறார் பூர்ணா. இந்நிலையில் அவரைத் தேடி வந்தது ஒரு குத்துப் பாடல் வாய்ப்பு.
 
சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வந்த வாய்ப்பை பூர்ணா ஏற்றுக் கொண்டுள்ளார். அயிட்டம் டான்சராக அவர் மாறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.