வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2016 (16:41 IST)

பொங்கலுக்கு விஜயின் பைரவாவோடு மோத வரும் புரூஸ் லீ!!

பிரசாந்த் பாண்டியராஜின் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்  நடித்து வரும் படம் புரூஸ் லீ. இதில் ஜி.வி. பிரகாஷ்க்கு ஜோடியாக  கிருத்தி கர்பண்டா நடித்துவருகிறார். கிருத்தி கர்பண்டா தெலுங்கு, கன்னடத்தில் பல படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் நடிப்பது இதுவே முதல்முறை.

 
ஜி.வி.பிரகாஷ் நடித்த 'கடவுன் இருக்கிறான் குமாரு' படத்திற்கு பிறகு வெளிவரும் புரூஸ் லீ படம் எப்போது வெளியாகும் என அதன் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். நடிகர் விஜய் நடிக்கும் பைரவா திரைப்படம் வரும் அடுத்த வருடம் அதாவது 2017-ல் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. புரூஸ் லீயும் பைரவாவோடு வெளியாகிறது. விஜய்யின் பைரவா டீசர் வெளிவந்தபோது அதனை ஜி.வி.பிரகாஷ் வரவேற்று டிவிட் செய்திருந்தார்.