வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (22:35 IST)

இந்த முறையும் உதயநிதிக்கு அந்த சிக்கல் வராது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி இருந்த ஐந்து வருடங்களில் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ஒரு படம் கூட வரிவிலக்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'யூ' சான்றிதழ் பெற்ற 'மனிதன்' படம் உள்பட எந்த படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காத நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உதயநிதியின் 'சரவணன் இருக்க பயமேன்' என்ற படத்திற்கு வரிவிலக்கு கிடைத்தது



 
 
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான 'பொதுவாக எம்மனசு தங்கம்' திரைப்படம் இன்று சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படம் வரிவிலக்கு பெற தகுதி பெற்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் மீண்டும் ஒருமுறை உதயநிதிக்கு வரிவிலக்கு சிக்கல் வராது. ஆனால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளதால் வரிவிலக்கு அறிவிப்பு இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
உதயநிதி ஸ்டாலின், நிவிதா பேத்ராஜ், பார்த்திபன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தளபதி பிரபு இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது