Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓலா கேப்புக்கு எதிராக பார்வதி நாயர் ட்வீட்; அதிர்ச்சியான நிறுவனம்

Last Modified புதன், 14 மார்ச் 2018 (13:19 IST)
நடிகை பார்வதி நாயர் ஓலா நிறுவனத்துக்கு எதிராக போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது. அந்த ட்வீட்டை நீக்குமாறு அந்த நிறுவனம் கேட்டும் அதனை நீக்க  மறுத்துவிட்டாராம்.
நடிகை பார்வதி நாயர் சென்னை வந்தபோது ஓலா கேப்பில் பிரைம் சேவையை புக் செய்துள்ளார். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் டிரைவரோ ஆள்  நடமாட்டம் இல்லாத, தெருவிளக்கு கூட இல்லாத இரவி நேரத்தில் இடத்தில் காரை நிறுத்தி இறங்க சொல்லியுள்ளார். மேலும் நான் வேறு ஒரு  வாடிக்கையாளரை பிக்கப் செய்ய போகணும், நீங்கள் இறங்குங்கள் என்று டிரைவர் பார்வதியிடம் தெரிவித்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து பார்வதி உடனே கஸ்டமர் கேருக்கு போன் செய்து கேட்டதற்கு, நீங்கள் வர வேண்டிய இடம் வந்துவிட்டது என்று கூறியுள்ளனர். டிரைவர்  வேறு திட்டிக் கொண்டே இருந்ததால் வேறு வழியில்லாமல் இரவு நேரத்தில் அந்த இருட்டான இடத்தில் இறங்கியுள்ளார் பார்வதி.
இந்நிலையில் இரவு நேரத்தில், தன்னை பாதியில் இறக்கிவிட்ட ஓலா கேப் நிறுவனத்திற்கு எதிராக பார்வதி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில்,  சென்னையில் ஓலோ சேவை ரொம்ப மோசமாக உள்ளது. இது செய்தி அல்ல என்றும், பிரைம் புக் செய்தது கூட அந்த டிரைவருக்கு தெரியவில்லை. மினி புக்  செய்தேன் என்று நினைத்து பாதி வழியில் இறக்கிவிட்டார் என்றார்.
 
தற்போது ஓலாவுக்கு எதிராக பார்வதி போட்ட ட்வீட் வைரலாகி, ரசிகர்கள் அந்த கேப் நிறுவனத்தின் சேவையை எதிர்த்து கேல்வி எழுப்பியுள்ளனர். இதனை அறிந்த ஓலா நிறுவனம் பார்வதியை தொடர்பு கொண்டு, டிரைவரை சஸ்பெண்ட் செய்துவிட்டோம். அந்த ட்வீட்டை நீக்குங்கள் என்று கெஞ்சியும், அந்த  ட்வீட்டை நீக்கவில்லையாம் பார்வதி நாயர்.


இதில் மேலும் படிக்கவும் :