1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 18 மார்ச் 2016 (13:12 IST)

கட்சி ஆணையிட்டால்... ரஜினி, விஜயகாந்தை கலங்கடித்த விஜயகுமார்

கட்சி ஆணையிட்டால்... ரஜினி, விஜயகாந்தை கலங்கடித்த விஜயகுமார்

சட்டமன்ற தேர்தல் நெருங்குகையில் தமிழகத்தில் காமெடிகளும் அதிகரிக்கின்றன. நடிகர் விஜயகுமார் பாஜக -வில் இணைந்ததும், கட்சி பத்து மடங்கு பலம் பெற்றுவிட்டது என்றொரு காமெடியை உதிர்த்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.


 
 
கட்சியில் இணைந்த பின் விஜயகுமாரிடம் கேள்விகள் கேள்கப்பட்டன. அப்போது பேசியவர், ரஜினி, விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்கும் எண்ணம் இல்லை. ஆனால், கட்சி கட்டளையிட்டால் இருவரையும் சந்தித்து ஆதரவு கேட்பேன் என்றார்.
 
ரஜினி, விஜயகாந்தை பயமுறுத்த இனி, விஜயகுமார் என்று எழுதிக் காட்டினால் போதும். தெறித்து ஓடிட மாட்டாங்க...?