Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்னை அடித்து உதைத்தார்: விவாகரத்தான நடிகை பரபரப்பு புகார்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 17 மார்ச் 2017 (11:57 IST)
பாகிஸ்தானை சேர்ந்த நடிகை வீணா மாலிக் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டுஅவர் தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

 
 
2 குழந்தைகள் பிறந்த நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். லாகூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விவாகரத்து பெற்றார் வீணா.
 
பாகிஸ்தான் டிவி நிகழ்ச்சி ஒன்றில் வீணா மாலிக் கலந்து கொண்டார். இதே நிகழ்ச்சியில் ஆசாதும் கலந்து கொண்டார். இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்காக முயற்சி எடுக்கப்பட்டது.
 
அப்போது, நான் வீணாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஆசாத் கூறினார். இதை கேட்ட வீணா, ஆசாத் செய்த இரண்டு விஷயங்களை என்னால் மன்னிக்கவே முடியாது என்றார்.
 
ஆசாத் என்னை அடித்து, மன ரீதியாக கொடுமைப்படுத்தியதுடன் தொடர்ச்சியாக அவமதித்துள்ளார். இதனால் நான் அவரை மன்னிக்க மாட்டேன் என்றார் வீணா.
 
பின்னர், வீணாவை அன்பாக பார்த்துக் கொள்வதாகவும், தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழுமாறும் எழுத்துப்பூர்வமாக ஆசாத் எழுதி தந்த பிறகு, வீணா கணவரை மன்னித்துவிட்டதாக கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :