வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2015 (15:48 IST)

நாளை முதல் எந்த தமிழ்ப் படமும் வெளியாகாது - தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை

லிங்கா படத்துக்கு வேந்தர் மூவிஸ் நஷ்டஈடு தராவிட்டால், அவர்களின் பாயும் புலி படத்தை வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய ஏடயாக்களில் வெளியிட மாட்டோம் என பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.


 

 
அவர்களின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. பாயும் புலி படத்தை முடக்கப் பார்க்கிறார் என திருச்சி விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் தந்தனர்.
 
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம், நாளை முதல் எந்தத் தமிழ்ப் படமும் வெளியாகாது என அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கோயம்பேடு ரோகினி தியேட்டர் உரிமையாளர் பன்னீர் செல்வம், தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக் கொண்டு, தொடர்ந்து தமிழ் சினிமாவை அழிக்கும் தீய சக்தியாக வேலை செய்து வருகிறார்.
 
இதன் தொடர்ச்சியாக ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். தங்களுக்கு ஒரு பெருந்தொகை தரவேண்டும் என்றும் அந்த தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார். இதனை கண்டிக்கும் வகையிலும், இதற்கு தீர்வு காணும் விதத்திலும் வருகிற 4-9-2015 முதல் புதிய நேரடித் தமிழ் படங்கள் மற்றும் மாற்று மொழிப் படங்களும் வெளியிடுவதில்லை என்றும், மேலும் 11-9-2015 முதல் அனைத்து திரைப்படங்களும் தமிழகம் முழுவதும் திரையிடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த பிரச்சனையில், தமிழக அரசு தலையிட்டு இதுபோன்ற தீயசக்திகளிடமிருந்து தமிழ் திரையுலகை மீட்டுத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
 
 
தயாரிபாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் முடிவால் நாளை புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.