வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2015 (10:23 IST)

பாயும் புலி கதை தெரியுமா?

பாயும் புலி படத்தில் ஒரு எதிர்பாராத விஷயம் வைத்திருப்பதாகச் சொன்னார் சுசீந்திரன்.


 


அதாவது, படத்தின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவரை நடிக்க வைத்திருக்கிறாராம். அது யார் என்பது படம் பார்க்கும் போது தெரியும் என்றார்.
 
படம் பார்த்த பிறகும் தெரியாமலிருக்க, அவர் ஒன்றும் இன்விசிபிள் மேன் இல்லையே.
 
சரி, பாயும் புலியின் கதை என்ன?
 
படத்தில் விஷால் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார். கெட்டவர்களை போட்டுத் தள்ளுவதுதான் இவர் டூட்டி. தன் மீது கை வைத்தால் சாதாரணமானவனே சும்மாயிருக்க மாட்டான்.
 
ஒரு போலீஸ்காரன் அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மீது கை வைத்தால்...? இதுதான் பாயும் புலி படத்தின் கதை என்றார் சுசீந்திரன்.
 
பாஸ்... இதுக்கு பேரு கதையில்ல, பில்டப்.