Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உங்கள் ஓவியா உலகநாயகனுடன்: ரசிகர்கள் கொந்தளிப்பு!

உங்கள் ஓவியா உலகநாயகனுடன்: ரசிகர்கள் கொந்தளிப்பு!

Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2017 (15:38 IST)

Widgets Magazine

நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார் என உறுதியாக தெரிந்துவிட்டது. இதனையடுத்து வெளியேறிய நபருடன் கமல் உரையாடுவது வழக்கம். இந்நிலையில் கமலும் ஓவியாவும் உரையாடும் புகைப்படத்தை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.


 
 
நடிகை ஓவியா தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும், மன அழுத்தம் காரணமாக வெளியேறியதாகவும் நேற்றிலிருந்து தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுகிறார் என கூறப்பட்டது.
 
இப்படி வெளிவரும் செய்திகள் உண்மையா பொய்யா? ஓவியாவுக்கு உண்மையிலேயே என்ன ஆச்சு என்பது புரியாமல் அவரது தீவிர ரசிகர்கள் இணையத்தை அலறவிட்டு வருகின்றனர். ஓவியா இல்லாமல் பிக் பாஸ் இல்லை என ஹேஷ் டேக் உருவாக்கி அதனை ட்ரெண்ட் ஆக்கி வந்தனர்.
 
இந்நிலையில் நடிகை ஓவியா தான்னை பற்றி பரவி வந்த வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மை தான். மீண்டும் நிகழ்ச்சிக்கு செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருவதாக விளக்கம் அளித்ததாகவும் கூறப்பட்டது. மேலும், இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுடன் அவர் கலந்து கொள்வார் எனவும் கூறப்பட்டது.
 
இதனையடுத்து தற்போது விஜய் தொலைக்காட்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசனுடன் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலந்துரையாடுகிறார். இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனாலும் ஓவியாவின் தீவிர ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அவர்கள் ஓவியா இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை திட்டி வருகின்றனர் ஓவியா ரசிகர்கள். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களையும் அவர்கள் திட்டி வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பொதுவாக எம்மனசு தங்கம்

பொதுவாக எம்மனசு தங்கம் திரைப்படத்தின் படங்கள்

news

பிக்பாஸ் வேண்டாம் ; கொச்சி சென்று விட்டாரா ஓவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா விமானம் மூலம் கொச்சி சென்று விட்டார் என்ற ...

news

ஓவியா ரசிகர்களை சமாளிக்க அஜீத் பக்கம் சென்ற விஜய் டிவி..

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா ஏறக்குறைய வெளியேறிய சூழ்நிலையில், அவரின் ரசிகர்களை ...

news

பிக் பாஸ் ரைசாவிற்கு விரைவில் திருமணம்??

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரைசாவுக்கு விரைவில் திருமணம் நடக்கயிருப்பதாக தகவல் ...

Widgets Magazine Widgets Magazine