வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (18:42 IST)

ஓவியாவுக்காக உருவாகிறதா ‘களவாணி’ இரண்டாம் பாகம்?

‘களவாணி’ இரண்டாம் பாகம், ஓவியாவுக்கு கிடைத்துள்ள புகழால் உருவாகிறது என்று கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.


 

 
சற்குணம் இயக்கத்தில் 7 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ‘களவாணி’. சோலோ ஹீரோவாக விமல் முதன்முதலில் நடித்த இந்தப் படத்தில்தான், ஓவியா ஹீரோயினாக அறிமுகமானார். கஞ்சா கருப்புவின் ‘பஞ்சாயத்து’ காமெடி, வயிறு வலிக்க சிரிக்க வைத்தது.

மூன்று மடங்குக்கு மேல் லாபம் சம்பாதித்துக் கொடுத்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், விரைவில் தயாராகிறது. விமலுடன் சூரி, கஞ்சா கருப்பு இருவரும் நடிக்கின்றனர். ‘பிக் பாஸ்’ மூலம் ஓவியாவுக்கு ஏகப்பட்ட புகழ் கிடைத்திருப்பதால், அதைவைத்து படத்தை எளிதாக பிஸினஸ் செய்துவிடலாம் என்று கணக்குப் போட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், ஓவியா இதற்கு ஓகே சொல்வாரா என்றுதான் தெரியவில்லை.