Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜூலியை எதுவும் செய்ய வேண்டாம் - ஓவியா கோரிக்கை


Murugan| Last Updated: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (15:48 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலிக்கு எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என நடிகை ஓவியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல ஆயிரம் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், ஜூலியோ தனது நடவடிக்கை மூலம் பலரின் வெறுப்பையே சம்பாதித்தார். தற்போது அந்த நிகழ்ச்சி முடிந்து விட்டது. ஆனாலும், ஜூலிக்கு எதிராக ஓவியாவின் ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூலி சற்று பிரபலமடைந்ததால், சில கல்லூரி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ‘ஓவியா.. ஓவியா ’என கோஷமிட்டு அவரை மாணவ, மாணவிகள் கடுப்பேற்றினர். அதை சிரித்தபடியே சமாளித்தார் ஜூலி.
 
அதோடு, இவ்வளவு புகழுக்கு ஓவியா தகுதியானவர் கிடையாது. அவர், அவரின் ரசிகர்களை மதிப்பதே இல்லை என ஒரு பேட்டியிலும் கூறியிருந்தார். இது ஓவியா ஆரிமியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, சமீபத்தில் டிவிட்டரில் கணக்கு ஆரம்பித்துள்ள ஜூலியாவை கிண்டலடித்து பல ஓவியா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ஜூலிக்கு எதிரான கருத்துகளை பேச வேண்டாம் என ஓவியா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :