சென்னை சிட்டி செண்டரில் ஓவியா! ரசிகர்கள் மகிழ்ச்சி

oviya city center" width="600" />
sivalingam| Last Modified ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (23:30 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து உடல்நலம் காரணமாக வெளியேறிய ஓவியா, தற்போது முழு நலத்துடன் குணமாக உள்ளார் என்பதை அவர் இன்று சிட்டி செண்டருக்கு வந்ததில் இருந்தே தெரிந்தது.


 
 
சிட்டி செண்டரில் ஓவியாவை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அனைவரிடமும் சகஜமாக தனக்கே உரிய சிரிப்புடன் பேசிய ஓவியா, ரசிகர் ஒருவர் ஆரவ் காதல் குறித்து கேட்டதற்கு, 'நான் ஆரவ்வை உண்மையாக இன்னும் காதலிக்கின்றேன்' என்று கூறினார்.
 
ஒரு நடிகை என்றோ, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கானவர்களின் இதயங்களை வென்றவர் என்றோ ஒருசிறிய பந்தா கூட இல்லாமல் மிக இயல்பாக அவர் ரசிகர்களிடம் நடந்து கொண்டார். மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்கு சென்று டைட்டிலை வெற்றி பெறுவாரோ இல்லையோ கண்டிப்பாக ரசிகர்களின் மனதை கவர்வதில் அவர் வெற்றி பெற்றுவிட்டார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :