நான் கொடுத்ததை திருப்பி கொடு: ஆரவுக்கு அப்படி என்ன கொடுத்திருப்பார் ஓவியா?

நான் கொடுத்ததை திருப்பி கொடு: ஆரவுக்கு அப்படி என்ன கொடுத்திருப்பார் ஓவியா?


Caston| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (12:35 IST)
பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து நடிகை ஓவியா மற்றும் ஆரவ் இடையே ஒருவிதமான ஈர்ப்பு இருந்ததை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் பார்த்தனர்.

 
 
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி ஓவியாவை சேர்த்து வைத்து ஆரவை அடிக்கடி கிண்டல் செய்து வந்தனர். ஆரவும் அதனை ரசித்துக்கொண்டு தான் இருந்தார். தொடக்கத்தில் ஓவியா ஆரவிடம் காதலை சொன்னார் ஆனால் ஆரவ் அதற்கு சரியான ரெஸ்பான்ச் கொடுக்கவில்லை.
 
இதனையடுத்து ஓவியாவும் தனக்கு போரடிக்க ஆரம்பித்ததால் தான் சொன்ன காதலை வாபஸ் வாங்கி கொண்டு அப்படி எதுவும் இல்லை என கூறினார். ஆனால் அதன் பின்னர் ஆர்வ் ஓவியாவுடன் மீண்டும் நெருக்கம் காட்டினார். இதனால் ஓவியா மீண்டும் ஆரவிடம் நெருக்கம் காட்டினார்.
 
இதனையடுத்து இப்பொழுது ஆரவ் விலக ஆரம்பித்துள்ளார். ஓவியா தன்னை நெருங்கி வருவதால் எரிச்சலடைந்துள்ள ஆரவ் பிக் பாஸிடம் முறையிட்டார். அதற்கு பிக் பாஸ் இது தொடர்பாக நீங்களே ஓவியாவிடம் பேசுங்கள் என கூறினார்.
 
இதனையடுத்து ஓவியாவை வெளியே அழைத்த ஆரவ், நீ இப்படி பண்றது நல்லா இல்லை. பாக்குறவங்க தப்பா நினைப்பாங்க. இதை நான் ஏற்கெனவே உன்னிடம் பல தடவை சொல்லிருக்கேன் என்று கூறினார். ஆனால் இது எதையும் காதில் வாங்காத ஓவியா, சரி நான் ஒதுங்கி விடுகிறேன். ஆனா நான் கொடுத்ததை திருப்பி கொடு. அதை கொடுத்தால் நான் போய் விடுகிறேன் என்றார்.
 
அப்படி ஓவியா, ஆரவுக்கு என்ன கொடுத்திருப்பார் என்பது தான் அவரது ஆர்மியில் உள்ள பலருக்கும் சந்தேகமாக உள்ளது. நேற்று முன்தினம் சினேகன் சமையல் செய்துகொண்டு இருக்கும் போது ஓவியாவும் ஆரவும் அவரது அருகில் நின்று கொண்டிருந்தார்கள்.
 
அப்போது சுற்றி யாராவது இருக்கிறார்களா என திரும்பி பார்த்து கொண்டிருந்த ஓவியா சினேகன் சற்று நகர்ந்து சென்றதும் ஆரவை அவசரமாக நெருங்கினார். ஆனால் அப்போது உடனே விளம்பர இடைவேளை போடப்பட்டது. இதனை வைத்து பார்க்கும் போது ஓவியா ஆரவுக்கு முத்த ஏதாவது கொடுத்திருப்பாரோ என யூகிக்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :