1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (11:56 IST)

ஆஸ்கார் விருது - பல தரப்பட்டவர்களையும் சேர்க்க முடிவு

உலக அளவில் திரைப்பட கலைஞர்களை அங்கீகரிக்கும் வகைகயில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த விருதுதான் ஒவ்வொரு சினமா கலைஞர்களுக்கும் லட்சிய விருதாகவும் இருந்து வருகிறது.


 

 
இந்நிலையில், ஆஸ்கார் விருதுகளை வழங்கும் அமெரிக்காவின் " அக்கெடமி அஃப் மோஷன் பிக்சர்ஸ் , ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்" என்ற அமைப்பு செயல்ப்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களை பல தரப்பட்டவர்களையும் உள்ளடக்கும் வண்ணம் விரிவு படுத்த முயன்றுவருவதாக அமைப்பின் தலைவி செரில் பூன் இசாக்ஸ் கூறியிருக்கிறார்.
 
இந்த அமைப்பு வயது முதிர்ந்த வெள்ளையின ஆண்களால் அதிகமாக ஆதிக்கம் செலுத்தப்பட்டுவருவதாக வரும் விமர்சனங்களுக்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார்.
 
தென்கொரியாவில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இசாக்ஸ்,இந்த வருடத்தில் புதிதாக சேர்க்கப்படவிருக்கும் உறுப்பினர்கள் பலவகைப்பட்ட தரப்புகளிலிருந்து வருகிறார்கள்  என்று அவர் கூறினார்.
 
ஆஸ்கார் அமைப்பின் தலைவி இசாக்ஸ், ஆஸ்கார் விருது தேர்வு செய்யும் இந்த சங்கத்தின் முதல் ஆப்ரிக்க அமெரிக்க தலைவி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த அக்காடெமியில் 7 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அனைவரும் திரைப்படத்துறையோடு தொடர்பு கொண்டவர்கள் ஆவார்கள்