1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2015 (09:17 IST)

டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் - சானியா மிர்சாவை நேரில் வாழ்த்திய ரஹ்மான்

டென்னிஸ் உலகில் வெற்றிகளை தொடர்ந்து பதிவு செய்து வரும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி அமெரிக்காவின் சார்லஸ்டன் நகரில் நடைபெற்ற டபுள்யூ.டி.ஏ. ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. இதையடுத்து, சர்வதேச மகளிர் இரட்டையர் தரவரிசையில் சானியா - மார்டினா ஹிங்கிஸ் இணை முதல் இடத்துக்கு முன்னேறியது.
 

 
இந்திய டென்னிஸ் வீரர் ஒருவர் உலக தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல்முறை என்பதால் சானியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
 
இந்நிலையில், ஓ காதல் கண்மணி படத்தின் தெலுங்குப் பதிப்பின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு ஹைதராபாத் வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சானியா மிர்சாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பாராட்டு தெரிவித்தார். ரஹ்மானின் வருகையையும், அவரது பாராட்டையும் சானியா தனது ட்விட்டர் செய்தியில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.