செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 பிப்ரவரி 2015 (19:34 IST)

ஆஸ்கர் வென்ற க்ரெய்க் மேனுக்கு கமல் வாழ்த்து

விப்லாஷ் படத்துக்காக சிறந்த சவுண்ட் மிக்சிங் பிரிவில் கனடாவைச் சேர்ந்த க்ரெய்க் மேன் ஆஸ்கர் வென்றார். இவர்தான் கமலின் உத்தம வில்லன் படத்துக்கும் சவுண்ட் மிக்சிங் செய்துள்ளார்.
 
க்ரெய்க் மேன் ஆஸ்கர் வென்றதில் உத்தம வில்லன் டீமுக்கும் மகிழ்ச்சி. முக்கியமாக கமல்ஹாசன். க்ரெய்க் மேன் விருது வென்றது குறித்து கூறிய கமல், "க்ரெய்குக்காக நாங்கள் பெருமைப் படுகிறோம். அவரது சிறப்பான பணிக்கு ஆஸ்கார் விருது மூலம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

 

அவருடன் பணியாற்றிய போது அவரது சக்தி வாய்ந்த ஆளுமையும், பொறுமையும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
 
‘விப்லாஷ்’ படத்திற்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் நாங்கள் அதில் பணியாற்றியதைப் போலவும் நாங்களே ஆஸ்கார் வாங்கி விட்டதைப் போலவும் உணர்கிறோம். க்ரெய்க் மற்றும் அவருடைய குழுவிற்கும் எங்களது வாழ்த்துக்கள்" என கூறினார்.