Widgets Magazine

விஜய் சேதுபதி படத்தை வாங்கிய சன் டிவி

Oru Nalla Naal Paathu Solren
CM| Last Updated: வியாழன், 4 ஜனவரி 2018 (16:02 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.


ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. நிகாரிகா கோனிடேலா, காயத்ரி ஆகியோர் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

எமன் உள்ளிட்ட 8 கேரக்டர்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்தப் படத்துக்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திரக் கலைவிழாவில் நிகழ இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.



இதில் மேலும் படிக்கவும் :