ஒரே ஒரு புகைப்படம். உலக அளவில் டிரெண்ட். அதுதான் தல


sivalingam| Last Modified வியாழன், 16 மார்ச் 2017 (21:26 IST)
தல அஜித் நடித்த படம் ஒன்று கூட கடந்த ஆண்டு வெளிவரவில்லை. ஆனால் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் வருகின்றார்களே தவிர குறைவதற்கு சான்சே இல்லை. அவர் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் அவரை பற்றி தினமும் டுவிட்டரில் ஏதாவது ஒரு விஷயம் டிரெண்ட் ஆகிக்கொண்டே உள்ளது.

 


இந்நிலையில் தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் பல்கேரியாவில் தொடங்குகிறது. இதற்காக தல அஜித் கிழிந்த அழுக்கு சட்டையுடன் உடல்முழுவதும் காயம் இருக்கும் வகையில் நடித்த ஒரு காட்சியின் ஸ்டில் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது.

அஜித் குறித்த விஷயம் எதுவுமே இல்லாமல் டிரெண்ட் ஆக்கும் அவருடைய ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? உடனே இந்த ஒரே ஒரு ஸ்டில்லை டிரெண்ட் ஆக்கிவிட்டார்கள், அதுவும் உலக அளவில் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து போடும் டுவீட்டுகளால் டுவிட்டர் இணையதளமே அவர்களுடைய கட்டுப்பாட்டில் வந்தது போல் ஆகிவிட்டது.

பல்கேரியாவில் நடைபெறும் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் மற்றும் ஒரே ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாம்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :