வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : புதன், 5 ஜூலை 2017 (11:09 IST)

ஒருநாள் முதல்வராக கமல்

‘தமிழ்நாட்டின் ஒருநாள் முதல்வராக கமல் வரவேண்டும்’ என அல்போன்ஸ் புத்ரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 
 
மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த ‘பிரேமம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன்.  நிவின் பாலி, சாய் பல்லவி நடித்த இந்தப் படம், சென்னையில் மட்டும் 225 நாட்கள் ஓடியது. ஒரு மலையாளப் படம், தமிழில்  இத்தனை நாட்கள் ஓடியது, கடந்த சில வருடங்களில் இதுதான் முதல்முறை. நிவின் பாலி, நஸ்ரியா நடித்த ‘நேரம்’ படத்தை  இயக்கியதும் இவர்தான். 
 
‘தமிழகத்தின் ஒருநாள் முதல்வராக இருந்து, எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்துவைக்க வேண்டும்’ என இவர் தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’ படத்தில், ஒருநாள் முதல்வராக இருந்து அர்ஜுன் பிரச்னைகளைத் தீர்ப்பது போல், கமலும் தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறையால் தமிழ்நாட்டின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார் எனத் தெரிவித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.