செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 22 மே 2015 (14:24 IST)

மீண்டும் இணையும் உதயநிதி, - சந்தானம் - ராஜேஷ் கூட்டணி

எந்த நடிகரும் ஆசைப்படும் அறிமுகப்படமாக ஒரு கல் ஒரு கண்ணாடி உதயநிதிக்கு அமைந்தது. சென்னையில் இன்றுவரை எந்திரனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடியின் வசூலை வேறு படங்களால் முறியடிக்க முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக உதயநிதியின் ஒரே ஹிட்டும் அதுதான்.
அப்படத்தை இயக்கிய ராஜேஷுடன் மீண்டும் இணைகிறார் உதயநிதி. 
 
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை இயக்கி வரும் ராஜேஷ் அப்படத்துக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. இதில் சந்தானமும் நடிக்க உள்ளார்.
 
உதயநிதி தற்போது நடித்து வரும் கெத்து, நடிக்க உள்ள இதயம் முரளி இரு படங்களிலும் சந்தானம் இல்லை என்பது முக்கியமானது.