வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (15:22 IST)

தள்ளிப்போன விஐபி 2 படத்தில் ரிலீஸ் தேதி

தனுஷ் பிறந்தநாளன்று ரிலீஸாக இருந்த விஐபி 2 படம் தவிர்க்க முடியாத காரணத்தால் அடுத்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா இயக்கியுள்ளார். விஐபி 2 வரும் ஜூலை 28ஆம் தேதி திரையில் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
 
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், தனுஷ் பிறந்தநாளன்று வெளியாக இருந்த விஐபி 2 படம் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆகஸ்டு மாதம் வெளியாக உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.