செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 26 பிப்ரவரி 2015 (10:02 IST)

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் - அமெரிக்க நீதிமன்றம் அமிதாப்புக்கு நோட்டீஸ்

1984 -இல் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்களின் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். பெரும் மரம் ஒன்று வீழ்ந்தால் சில உயிரினங்கள் சாகத்தான் செய்யும் என்று இந்த படுகொலைகளை காங்கிரஸ் அப்போது நியாயப்படுத்தியது.
இந்த கலவரத்தை தூண்டிவிட்டதாக நடிகர் அமிதாப்பச்சனுக்கு எதிராக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் சீக்கிய உரிமை அமைப்பு வழக்கு தாக்கல் செய்தது.
 
இந்த வழக்கில் அமிதாப்பச்சனுக்கு கோர்ட் சம்மன் பிறப்பித்தது. அந்த சம்மன் அமிதாப்பின் ஹாலிவுட் மேனேஜரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
அமெரிக்க சிவில் நடைமுறை விதிகளின்படி, சம்மன் ஒப்படைக்கப்பட்ட 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர் பதில் அளிக்க வேண்டும். மார்ச் 17-ந் தேதிக்குள் அமிதாப்பச்சன் பதில் அளிக்க தவறினால், அவருக்கு எதிராக தண்டனை நடவடிக்கை மற்றும் இழப்பீடு உத்தரவு பிறப்பிக்கக்கோரி கோர்ட்டை அணுகப் போவதாக சீக்கிய உரிமை அமைப்பின் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் தெரிவித்தார்.