Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உடல்நலமில்லை... பூஜா தேவரியாவுக்கு பதில் ரங்குஸ்கியான சாந்தினி

Sasikala| Last Modified திங்கள், 9 ஜனவரி 2017 (17:01 IST)
ஜாக்சன் துரை இயக்குனர் தரணீதரனின் ராஜா ரங்ஸ்கி திரைப்படத்தில் பூஜா தேவரியா நடிப்பதாக இருந்தது. அவருக்கு  உடல்நிலை சரியில்லாததால் சாந்தினியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 
இந்தப் படத்தில் பூஜா நடிப்பதாக இருந்த கதாபாத்திரம் ஓர் எழுத்தாளர். அவரது பெயர்தான் ரங்குஸ்கி. மறைந்த எழுத்தாளர்  சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை ரங்குஸ்கி என்று அழைப்பார்கள். அதை வைத்து  இந்தப் பெயர் தேர்வு செய்யப்பட்டது.
 
தற்போது பூஜாவுக்கு பதில் சாந்தினி ரங்குஸ்கி வேடத்தில் நடித்து வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :