Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்ல, விஜய் சேதுபதிக்கும் இவர்தான் வில்லன்

Cauveri Manickam| Last Modified புதன், 17 மே 2017 (13:34 IST)
மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்குமே வில்லனாக நடித்து வருகிறார்.

 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா  நடிக்க, சினேகா உள்ளிட்ட பலர் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு  வில்லனாக நடிக்கிறார் ஃபஹத் ஃபாசில்.
 
‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் ‘அநீதி கதைகள்’. விஜய் சேதுபதி  ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்து வருகிறார் ஃபஹத் ஃபாசில் என்கிறார்கள். ஒரு ஷெட்யூல் ஷூட் முடிந்துவிட்டதாம்.


இதில் மேலும் படிக்கவும் :