“யார் வேணும்னாலும் பிகினி போஸ் கொடுக்க முடியாது” – ராய் லட்சுமி

Cauveri Manickam| Last Modified புதன், 17 மே 2017 (12:33 IST)
“நினைத்தவர்கள் எல்லாம் பிகினியில் போஸ் கொடுத்துவிட முடியாது. அதற்கு ஒரு இது வேணும்” என்று கூறியுள்ளார்  நடிகை ராய் லட்சுமி.

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘அகிரா’ படத்தில், சின்ன வேடத்தில் தலைகாட்டினார் ராய் லட்சுமி. தற்போது, ‘ஜூலி 2’  படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தப் படம் ரிலீஸாகிறது. இதில், பயங்கர கிளாமராக  நடித்துள்ளார் ராய் லட்சுமி. பிகினியில் இவர் கொடுத்திருக்கும் போஸ்களைப் பார்த்தால், ரத்தம் சூடேறுகிறது.
 
“இந்தப் படத்தில் கிளாமரான வேடம்தான் எனக்கு. பிகினியில் கூட நடித்திருக்கிறேன். ஆனால், யார் வேண்டுமானாலும் பிகினி அணிந்து போஸ் கொடுத்துவிட முடியாது. அதற்கேற்ற உடற்கட்டு இல்லாவிட்டால், காமெடியாகத் தோன்றும். இதற்காக,  என்னுடைய எடையை கஷ்டப்பட்டு குறைத்தேன். பிகினியில் என் உடற்கட்டு நன்றாக இருப்பதாக அனைவரும்  தெரிவித்துள்ளனர்” என்கிறார் ராய் லட்சுமி.


இதில் மேலும் படிக்கவும் :