வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 29 நவம்பர் 2016 (17:42 IST)

இறுதிக்கட்டத்தில் நிவின் பாலியின் தமிழ்ப் படம்

நேரம் படத்தில் நடித்த நிவின் பாலி பிறகு மலையாளத்தில் பிஸியாகிவிட்டார்.  அவர் கால்ஷீட் தந்தால் வருடத்துக்கு 12 படங்கள் எடுக்க அங்கு தயாராக  இருக்கிறார்கள். ஆனாலும் காலமும் நேரமும் ஒதுக்கி அவர் தமிழில் ஒரு படம்  நடித்து வருகிறார்.


 

 
கன்னடத்தில் வெளியான உலிதவரு கண்டெந்தே படத்தின் தமிழ் ரீமேக்கான  இதனை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். தூத்துக்குடி மற்றும் அதனை  சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 
நிவின் பாலியை இயக்கியது சிறப்பான அனுபவமாக இருந்தது என்றும், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது விரைவில் முடிந்துவிடும் என்றும் கௌதம்  ராமச்சந்திரன் தெரிவித்தார்.