அஜித் படத்திற்கு சென்ற கேமராமேன் – அப்செட்டில் சிவகார்த்திகேயன் டீம் !

Last Modified திங்கள், 25 பிப்ரவரி 2019 (12:05 IST)
சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கேமராமேன் நீரவ் ஷா இப்போது அஜித் பட ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கும் பெயரிடப்படாத சயின்ஸ்பிக்‌ஷன் படத்தின் படப்பிடிப்பு சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் அதை சிறப்பாக படம் பிடிக்க 2.0 படத்தின் கேமராமேன் நீரவ் ஷா இந்தப் படத்தில் ஒப்பந்தமாகினார்.

இதுவரை நடந்த படப்பிடிப்புகள் அனைத்தையும் நீரவ் ஷாவே படமாக்கினார். ஆனால் பட்ஜெட் மற்றும் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையே உருவான சில கருத்து மோதல்களால் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் அஜித் நடிக்கும் பிங்க் ரீமேக் படத்தில் ஒப்பந்தமானார் நீரவ் ஷா.


இப்போது ஹைதராபாத்தில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதால் அதில் பணிபுரிந்து வருகிறார் நீரவ். இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் டீம் நீரவ் ஷா இல்லாமல் படப்பிடிப்பை மாற்று ஒளிப்பதிவாளரை வைத்து படம்பிடித்து வருகின்றனர். இதனால் முக்கியமானக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது நீரவ் ஷா இல்லாததால் அனைவரும் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :