அஜித்தின் வலிமை படத்தில் இணையும் முக்கிய நடிகர்-நடிகை

Last Modified வெள்ளி, 6 டிசம்பர் 2019 (22:10 IST)
தல அஜித் நடிக்கவுள்ள ’வலிமை’ திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வை இயக்குனர் வினோத் கிட்டத்தட்ட முடித்து விட்டதாகவே தெரிகிறது. அஜித் ஜோடியாக நயன்தாராவும் இன்னொரு முக்கிய கேரக்டர்களில் அருண் விஜய்யும் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி விரைவில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்து விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது
அதே போல் இந்த படத்தில் யோகி பாபு காமெடி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 60 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் இந்த 60 நாட்களில் கிட்டத்தட்ட பாதி படத்திற்கு மேலான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :