வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : திங்கள், 21 மே 2018 (20:45 IST)

பா.இரஞ்சித்தின் அடுத்தடுத்த ஹீரோக்கள் யார் தெரியுமா?

பா.இரஞ்சித்தின் அடுத்தடுத்த படங்களின் ஹீரோ யார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

 
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். அதன்பிறகு, ‘மெட்ராஸ்’ மற்றும் ‘கபாலி’ படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கத்தில் ‘காலா’ படம் ரிலீஸாக இருக்கிறது. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படத்தை, தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
‘காலா’ படத்துக்குப் பிறகு சூர்யாவை இயக்கப் போகிறார் பா.இரஞ்சித் எனத் தகவல் கிடைத்துள்ளது. ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பிறகே சூர்யாவைத்தான் இயக்க இருந்தார் பா.இரஞ்சித். ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை. திடீரென ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்திலும், அதற்கடுத்து சுதா கொங்கரா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லது அதற்கு முன் நடிப்பாரா எனத் தெரியவில்லை.