1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 26 ஜனவரி 2015 (19:10 IST)

வலியவன் புதிய ஷெட்யூல்ட் - பாடல் காட்சியை படமாக்குகிறார்கள்

சரவணன் இயக்கத்தில் ஜெய், ஆண்ட்ரியா நடித்துவரும் வலியவன் படத்தின் தொண்ணூறு சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. சில பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டும்.
சமீபத்தில் புதுச்சேரி அருகே பிரமாண்ட அரங்கு அமைத்து ஒரு பாடலை படமாக்கினர். அடுத்த ஷெட்யூல்டில் மேலுமொரு பாடல் காட்சியைப் படமாக்குகிறார் சரவணன்.
 
சென்னை தாம்பரம் அருகிலுள்ள கல்லுnரியில் இந்தப் பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர். ஜெய், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட இந்தப் பாடல் காட்சியை நடன இயக்குனர் ராஜு சுந்தரம் அமைக்க இருக்கிறார்.
 
சரவணனின் முதலிரு படங்களைப் போலவே இந்தப் படத்திலும் தனி காமெடி ட்ராக்கோ, காமெடி நடிகர்களோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.