Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அது வேற வாய், இது நாற வாயா? பாரதிராஜாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Last Modified செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (10:12 IST)
காவிரி பிரச்சனைக்காக போராடி வருவதாக கூறி கொண்டிருக்கும் பாரதிராஜா உள்பட ஒருசில இயக்குனர்கள் காவிரிக்காக குரல் கொடுப்பதைவிட ரஜினியை தாக்கியே அதிகமாக பேசி வருகின்றனர். இவர்களது டார்கெட் ரஜினியா அல்லது காவிரியா? என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று பாரதிராஜா விடுத்த அறிக்கை ஒன்றில் கர்நாடக காவியின் தூதுவர் தான் இந்த ரஜினி என்றும், தமிழர்கள் தந்த பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து வரும் ரஜினி, தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் பாரதிராஜா கூறியுள்ளார்.

Rajinikanth
இதே பாரதிராஜா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது திரைப்பட பயிற்சி பள்ளியின் தொடக்க விழாவிற்கு ரஜினியை அழைத்து வந்தார் என்பதும் அந்த விழாவில் "ரஜினி மாதிரி 100 ஸ்டார் வரலாம். ரஜினி மாதிரி ஒரு நல்ல மனிதன் வர முடியாது" என பாரதிராஜாதான் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது சொந்த தேவைக்கு உதவியதால் ரஜினியை வாழ்த்திய பாரதிராஜா இப்போது மட்டும் எதிர்ப்பது ஏன் என்றும், அது வேற வாய் இது நாற வாயா? என்றும் நெட்டிசன்கள் பாரதிராஜாவை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :