வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : திங்கள், 22 மே 2017 (16:13 IST)

செல்வராகவன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம், அடுத்த மாதம் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. நந்திதா, ரெஜினா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஹாரர் படமான இதை, இயக்குநர் கெளதம் மேனனும், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் ரெடியாகி சிலபல மாதங்களாகியும், ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில், வருகிற ஜூன் மாதம் 2ஆம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு ஜூலை முதல் ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்த இருப்பதால், தமிழக அரசு அளித்துவரும் கேளிக்கை வரி கிடைக்காது. எனவே, ஜூலைக்குள் பல படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.