பெட் ரூம் விஷயத்தை டிவி நிகழ்ச்சியில் போட்டுடைத்த கணவர்..! - வெட்கத்தில் புலம்பித்தள்ளும் நடிகை..!

Last Updated: திங்கள், 14 ஜனவரி 2019 (11:42 IST)
நடிகையும், மாடல் அழகியுமான  நேஹா தூபியாவின் கணவர் அங்கத் பேடி தங்களின் பிரைவேட் விஷயத்தை எல்லாம் தான் பங்கேற்ற ஒரு டிவி நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டதாக மனைவி நேஹா புலம்பி தள்ளியுள்ளார். 


 
பாலிவுட் நடிகை நேஹா தூபியாவும், நடிகர் அங்கத் பேடியும் காதலித்துவந்தனர். காதலிக்கும்போதே நேஹா கர்பமானதால் கடந்த ஆண்டு ஜூன் 10 ம் தேதி அவசர அவசரமாக திருமணம் செய்தார்கள். கர்ப்பமானதால் தான் இந்த திடீர் திருமணம் என பாலிவுட் தலைப்பு செய்திகளில் வலம் வர அதனை நேஹா முதலில் மறுத்தார். ஆனால் கணவர் அங்கத் பேடியோ டிவி நிகழ்ச்சியில் அத்தனை உண்மையையும் போட்டுடைத்தார். 
 
நேஹா கர்ப்பமானதால் தான் திடீர் என்று திருமணம் செய்ததாக அங்கத் கூறினார். தற்போது இது குறித்து நேஹா பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது,
 
எதை எல்லாம் யாருக்கும் தெரியாமல் வைத்திருக்க வேண்டுமோ அதை எல்லாம் அங்கத் வெளியே சொல்லிவிட்டார். அதுவும் நான் நடத்தும் நிகழ்ச்சியில். ஒரு மனைவியாக அந்த விபரங்களை மறைக்க நினைத்தேன், தயாரிப்பாளராக அவர் சொன்னது சரி என பட்டதாக கூறியுள்ளார் . 
 
திடீரென முடிவெடுத்து 48 மணிநேரத்தில் என் திருமணம் முடிவாகி நடந்தது. வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் திடீர் என்று தான் நடக்கும். ஆதலால் எனக்கு வருத்தம் இல்லை. 
 
நான் நடத்தும் நோ ஃபில்டர் நேஹா நிகழ்ச்சியில் இயக்குனர் கரண் ஜோஹாரிடம் நிறைய கேள்விகள் கேட்டது பிடித்திருந்தது என்றார் நேஹா. 


 
நேஹா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டார். அதை அவரின் பெற்றோரிடம் கூற அவருக்கு தைரியம் இல்லை. அதனால் நான் அவர் வீட்டிற்கு சென்று அவர் அப்பா, அம்மாவிடம் கூறினேன். நான் கூறியதை கேட்டு அவர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டனர் என்று அங்கத் பேடி தெரிவித்திருந்தார். 


இதில் மேலும் படிக்கவும் :