Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜோதிடரின் கட்டுப்பாட்டில் நயன்தாரா??


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 20 ஜூன் 2017 (15:48 IST)
நயன்தாரா சினிமாவில் தனது செக்கென்ட் இன்னிங்ஸில் வெற்றி பாதையிலேயே பயணித்து வருகிறார். என்னதான் வயது அதிகரித்தாலும் தற்போது வரை முன்னணி நடிகையாகவே உள்ளார்.

 
 
சமீப காலங்களில் நாயகிக்கு முக்கியதுவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. ஆனால், இளம் ஹிரோக்கள் நயன்தாராவுடன் நடிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர்.
 
இளம் நடிகர்களான சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்திலும், அதர்வாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நயன்தாராவுக்கு மட்டும் மார்க்கெட் எப்படி இப்படி சூப்பராக உள்ளது என்பதே பல நடிகைகளின் சந்தேகம். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
 
நயன்தாரா மலையாள ஜோதிடர் ஒருவர் பேச்சை கேட்டுதான் நடக்கிறாராம். அவர் என்ன கூறுகிறாரோ அதை கேட்டு தான் நயன்தாரா செயல்படுகிறாராம். 
 
மேலும், ஜோதிடரின் வழிகாட்டுதல் அவரின் கெரியருக்கு பெரிதும் உதவுவதாக நயன்தாரா நம்புகிறாராம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :