உருண்டு பிரண்ட நயன்தாரா!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 18 மார்ச் 2017 (16:05 IST)
நயன்தாரா தற்போது திரைதுறையில் முன்னணி நடிகையாக உள்ளார். நடிகர்களுக்க்கு இணையாக கதாநாயகிக்கு முக்கியதுவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 
 
நயன்தாரா தனது தொழிலில் மிகவும் சின்சியரானவர். இதனால் தான் என்னவோ அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ன பட்டம் வழங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நிலைத்துள்ளார்.
 
எத்த்னை இயக்குனர்கள் அவரை புகழ்ந்தாலும் தற்போது நயன்தாராவை வைத்து டோரா படத்தை இயக்கி வரும் தாஸ் ராமசாமி தனது பங்கிற்கு நயன்தாராவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
 
மாலை 5 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பித்து விடியற்காலை 5 மணி வரை ஆனாலும் மேடம் அப்படியே வொர்க் பண்ணி தருவாங்க. கேரவனில் ரெஸ்டு என்கிற பேச்சிற்கே இடம் கிடையாது. எந்த ஒரு பந்தாவும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
 
மேலும், படத்தில் நடந்த ஒரு விஷயத்தையும் தெரிவித்துள்ளார். படத்தில் நடு ரோட்டில விழுந்து பிரளுவது போல ஒரு காட்சியில் நடிக்க வேண்டும். அதை சொன்னவுடனே, நயன்தாரா மறுப்பு தெரிவிப்பார் என பார்த்தால் ஷாட்டுக்கு ரெடி என்று நடித்து கொடுத்தார் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் இயக்குனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :