Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகுபலி பட வாய்ப்பை தவறவிட்டு வருந்தும் நயன்தாரா....


Murugan| Last Updated: செவ்வாய், 9 மே 2017 (11:50 IST)
பாகுபலி படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் உலக அளவில் சினிமா ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமில்லாமல்,  இதுவரை  ரூ.1000 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

 

 
இந்நிலையில், இந்த படத்தில் தந்தை பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருப்பார். இதில் நடிக்க முதலில் நயன்தாராவைத்தான் கேட்டுள்ளார் ராஜமௌலி. ஆனால், நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. அதன் பின்னரே அதில் அனுஷ்கா நடித்தார். ஒரு சிறந்த மற்றும் வியாபாரரீதியாக இவ்வளவு வெற்றி பெற்ற படத்தில் நடிக்காமல் விட்டு விட்டோமே என தற்போது நயன்தாரா ஃபீல் பண்ணுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
அதேபோல், படத்தின் முக்கிய கதாபாத்திரமான பாகுபலி வேடத்தில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனையும், வில்லன் வேடமான பல்வாள் தேவன் வேடத்திற்கு ஜான் ஆப்ரகாமையும், தமனா நடித்த அவந்திகா வேடத்தில் சோனம் கபூரையும், ரம்யாகிருஷ்ணன் ஏற்ற சிவகாமி வேடத்தில் நடிக்க நடிகை ஸ்ரீதேவியையும் படக்குழு நாடியுள்ளது. ஆனால், அந்த வாய்ப்பை அவர்கள் மறுத்து விட்டதாக தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :