Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிரஞ்சீவியின் 151வது படத்தில் நயன்தாரா! சம்பளம் ரூ.8 கோடி?


sivalingam| Last Modified செவ்வாய், 11 ஜூலை 2017 (23:00 IST)
கைதி நம்பர் 150' வெற்றி படத்தை அடுத்து சிரஞ்சீவியின் 151வது படம் முடிவாகிவிட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து வீரப்போர் புரிந்த தெலுங்கு மன்னன் நரசிம்மரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.


 
 
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகவுள்ளது. இவ்வளவு பெரிய பட்ஜெட் என்பதால் பெரிய நடிகை நாயகியாக வேண்டும் என்ற வகையில் படக்குழுவினர் நயன்தாராவை அணுகினர். நயன்தாராவின் எந்த கண்டிஷனுக்கும் தயார், ஆனால் மொத்தமாக எட்டு மாதங்கள் கால்ஷீட் தேவை, இதுதான் படக்குழுவினர்களின் ஒரே நிபந்தனை/
 
இந்த நிலையில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், எட்டு மாத கால்ஷீட்டுக்கு ரூ.8 கோடி சம்பளம் என்றும் பேசி முடிக்கப்பட்டதாம். மிக விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பாகுபலி' படத்தை விட பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :