Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நயன்தாராவின் மிரட்டலான 'டோரா' டீசர்

Sivalingam| Last Modified வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (22:06 IST)
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'டோரா' திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இன்று வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பெரிய ஸ்டார் படங்களின் டீசருக்கு இணையாக இந்த படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதோடு, டுவிட்டரில் தனி ஹேஷ்டேக் போட்டு இந்த டீசர் குறித்து பலர் பாசிட்டிவ் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்.

'மாயா' படத்தை அடுத்து மீண்டும் திகில் படத்தில் நடித்துள்ள நயன்தாரா, நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளதாகவும், நயன்தாராவுக்கு இந்த படம் பெரும் திருப்பத்தை கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். காரில் உள்ள ஆத்மா, நயன்தாராவை சுற்றி வந்து தான் நினைத்தை நிறைவேறும் வரை நயன்தாராவுடன் சுற்றுவதாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாக டீசரில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் டீசரில் மெர்வின் - சாலமன் இரட்டையர்களின் பின்னணி இசை பட்டையை கிளப்பி வருவதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், சுலில் குமார், தம்பி ராமையா உள்ளிடோர் நடித்துள்ள இந்த படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார். பிரபல இயக்குனர் சற்குணம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :