Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.10 கோடி கேட்ட நயன்தாரா… பதறிய படக்குழு

புதன், 12 ஜூலை 2017 (16:14 IST)

Widgets Magazine

‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க ரூ.10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால், பதறிப்போயிருக்கிறது படக்குழு.


 

 
சுந்தர்.சி.யின் கனவுப்படமான ‘சங்கமித்ரா’, கனவாகவே நின்றுவிடுமோ என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட பிரச்னைகள். முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுக்க, ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரையும் ஹீரோவாக ஒப்பந்தம் செய்தார். ஒளிப்பதிவாளர் திடீரென விலக, வேறொரு ஒளிப்பதிவாளரை அழைத்து வந்தனர்..
 
படத்துக்காக வாள் சண்டையெல்லாம் கற்ற ஸ்ருதியும் இல்லாமல் போக, ஹீரோயினைத் தேடி வருகின்றனர். அனுஷ்கா ‘நோ’ சொல்லிவிட்ட நிலையில், அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் நயன்தாரா தான். சாதாரண படத்துக்கே 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நயன், இந்தப் படத்துக்கு 10 கோடி ரூபாய் கேட்கிறாராம்.
 
காரணம், இந்தப் படத்தில் கமிட்டானால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு வேறெந்தப் படத்திலும் நடிக்க முடியாது என்பதுதான். அவர் கேட்பது நியாயமாகத் தோன்றினாலும், அந்த அளவுக்கு சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் தயாராக இல்லை. நயனும் இறங்கி வரவில்லை. அவர் எப்படியாவது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வார் என ஏக்கத்துடன் காத்திருக்கிறது படக்குழு. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆரா மீது காதல் கொண்ட ஜூலி? - வீடியோ பார்க்கவும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகர் ஆரா மீது, ஜூலை காதல் வயப்பட்டுள்ளது போல் ...

news

கேரள சினிமா உலகில் தாதாவாக வலம் வந்த நடிகர் திலீப் - அதிர்ச்சி தகவல்கள்

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், கேரள சினிமா உலகில் ...

news

பிக் பாஸ் என்னும் ஆபாச நிகழ்ச்சி; 75% நிர்வாணம்: கூண்டோடு கைது செய்ய புகார்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். ...

news

விவேகம் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிவா இயக்கத்தில் விவேகம் படத்தின் டப்பிங் பணிகளை மூன்றே நாட்களில் அஜித் தனது டப்பிங் ...

Widgets Magazine Widgets Magazine