செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 4 மே 2015 (08:43 IST)

கிண்டர்கார்டன் டீச்சராக நடிக்கும் நயன்தாரா

நாளுக்குநாள் நயன்தாராவின் வயது குறைந்து கொண்டு போகிறது. இப்போது அறிமுகமாகும் சின்னப் பசங்களும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறார்கள். அவருக்கு கிடைக்கிற கதாபாத்திரங்களும் இளமை மாறாமல் இருக்கிறது.
ராம்நாத் இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் நயன்தாரா நடிக்க உள்ளார். திருநாள் என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜீவாவுக்கு கிராமத்து ரவுடி வேடம். நயன்தாரா, கிண்டர்கார்டன் டீச்சராக வருகிறார். 
 
திருநாளில் ரொம்பவும் ஹோம்லியாக வருகிறாராம் நயன்தாரா. ராம்நாத்தே இந்தத் தகவலை சொன்னார். ஹோம்லியான நடிகை வேண்டும் என்றால் எதற்கு நயன்தாரா?
 
ராம்நாத்... ரசிகர்களின் மனதை புண்படுத்தாதீங்க.